இருபத்தைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம்!

Friday, November 4th, 2016

25 வயதுக்குக் குறைந்த இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் வழங்கப்படக் கூடாது என, முச்சக்கர வண்டி சங்கங்கள் சில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன..

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்து அதனை செயற்படுத்துமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கோரியுள்ளதாக, அனைத்து இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த யோசனைக்கு தமது சங்கம் உள்ளிட்ட 12 சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக 18 – 25 வயதுக்குட்பட்ட சில இளைஞர்கள் முச்சக்கர வண்டியை ஜீவனோபாயமாக அல்லாது வினோதப் பொருளாக பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவற்றை தவிர்க்கும் பொருட்டு, 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரத்தை வழங்காது விடுலாம் எனவும், குறைந்தது 23 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு வருட பயிற்சிக்கு பின்னர் இந்த அனுமதியை வழங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1-25

Related posts: