உரிய முறையில் நட்டஈடு கொடுக்கப்படவில்லை – அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம்!
Monday, May 20th, 2019
படைபுழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய முறையில் நட்டயீடு கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நட்டயீட்டுத் தொகையை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும், அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நட்டயீட்டுத் தொகையை வழங்குவதில் முறைக்கேடுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் போக செய்கையின் போது படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
Related posts:
மயிலிட்டி கடற்தொழிலாளர்களுக்கு நோர்வே அரசாங்கம் உதவி!
அக்குபஞ்சர் சிகிச்சை – சிகிச்சை பெறச்சென்ற நபர் ஒரவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிர...
மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு - பொலிஸ் மா அதிபர்...
|
|
|
அரச அச்சக திணைக்களத்தினால் அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் பாரிய முறைகேடு – விசாரணைக்கு அமைச்சர் டலஸ்...
பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி மின்சாரம் - பரீட்சார்த்திகளின் நலன்கருதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள...
தொழிநுட்ப ரீதியிலான கல்வி முறைமையினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் - இரண்டு வாரங்களில் அமைச்சரவை அ...


