தொழிநுட்ப ரீதியிலான கல்வி முறைமையினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் – இரண்டு வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, December 5th, 2022

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் தரவுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆசிரிய – அதிபர் இடம்மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட சகல விடயதானங்களையும் தொழிநுட்ப முறைமையின் அடிப்படையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிநுட்ப ரீதியிலான கல்வி முறைமையினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அவற்றிற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை அனுமதியினை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

ஆயிரம் பாடசாலைகளுக்கு புதிதாக இணைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக பாதீட்டில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எந்தவொரு பாடசாலையும் தனித்துவிடப்படாமல் அனைத்தையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு இதுவரை பெற்றுக்கொடுக்கப்படாமையினால் அடுத்த வருடத்திற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மின்சார இணைப்பை பெற்றுவதற்கு புதிய நடைமுறைகள் - பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர்!
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பிலான வழக்குகளை விரைவாக நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவட...
சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு இந்திய பெற்றோலிய நிறுவனத்தினால் நன்க...