மசகு எண்ணெயின் விலை அதிகரித்தாலும் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை – அமைச்சர் உதய கம்மன்பில!
Tuesday, February 23rd, 2021
உலக வர்த்தக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்த போதிலும், அதன் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினைகள் தொடர்பில் பெட்ரோலிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே உலக வர்த்தக சந்தையில் மசகு எண்ணெயின் விலைகள் மீண்டும் அதிகரிப்பதானது இலங்கையின் வெளி வர்த்தகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு!
பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் - விவசாயத்துறை ...
ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் - தேர்தல்கள் ஆணையாளர் ...
|
|
|


