நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவிப்பு!
Monday, April 1st, 2024
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
இதேவேளை, 5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,652 ரூபாவுக்கும்,
2.3 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 23 ரூபாவினால் குறைக்கப்பட்டு 772 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி தற்கொலை குடிபோதையால் வந்த பரிதாபம்!
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!
போராட்டகாரர்கள் மீது, பாதுகாப்பு தரப்பினர் தாக்குதலை நடத்தும் கோரிக்கைக்கு கட்சி தலைவர்கள் அனுமதி ம...
|
|
|


