போராட்டகாரர்கள் மீது, பாதுகாப்பு தரப்பினர் தாக்குதலை நடத்தும் கோரிக்கைக்கு கட்சி தலைவர்கள் அனுமதி மறுப்பு!

Thursday, July 14th, 2022

 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட அழைக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு பிரதமரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கலந்துவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டை வழமைக்கு கொண்டுவர வேண்டுமாயின், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு அறிவிக்குமாறு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் அழுத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி, முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பை குறிப்பாக நாடாளுமன்றத்தை பாதுகாக்க இராணுவம் கடமைப்பட்டுள்ளது என ஜெனரல் சவேந்திர சில்வா சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

அவசர சூழலில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால், இராணுவம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? எனக் கேட்டுள்ளார்.

இதற்கு கட்சி தலைவர்கள் போராட்டகாரர்கள் மீது, பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் நடத்த அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய கட்சி தலைவர் கூட்டம் எந்த விசேட தீர்மானங்களும் எடுக்கப்படாமலேயே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: