இலங்கையில் சிறு வணிக முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம்!

Saturday, December 12th, 2020

இலங்கையிலுள்ள சிறுவணிக முயற்சிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திட்டம், இலங்கை மதிப்பில் 3.6 பில்லியன் ரூபாய் பெறுமதியிலானது எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தினால் நிதியளிக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஊடாக சிறுவணிக முயற்சிகளுக்கு அவசிமயான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இதனூடாக, ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலினால் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் புதிய சிறுவணிக முயற்சிகள் உருவாக்கப்படுவதற்கும் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலைபேறான பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறையினரின் பங்களிப்பை வலுப்படுத்துதல் மற்றும் வணிகங்களின் இலாபத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கடப்பாடு,  அமெரிக்காவின் இந்தச் செயற்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளிவிவகார ...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளைமுதல் முழமையான கற்றல் செயற்பாடகள் ஆரம்பம் - நோய்...
தனியார்துறை ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் - தொழில் அ...