மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரியில் – அமைச்சர் மகிந்த அமரவீர!

Tuesday, December 6th, 2016
இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி மாதம் நடைபெறும் என்று கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களினால் ஏற்படும் பிரச்சினைகளால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என்று அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 15ஆவது நாள் இன்றாகும். இன்றைய தினம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அபிவிருத்தி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலைவிவாதம் இன்று இடம்பெறுகின்றது. இதில் கலந்துகொண்டு விவாதிக்கையிலேயே அமைச்சர் மகிந்த அமரவீர இந்தவிடயங்களை குறிப்பிட்டார்.

அமைச்சர் மகிந்த அமரவீர தொடர்ந்து உரையாற்றுகையில் கடல் உற்பத்திகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு தெளிவான திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

மீனவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நிவாரணங்கள் வழங்குவதற்கான திட்டத்திற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. கடற்றொழில் துறைக்காக 18 வருடங்களின் பின்னர் ஒதுக்கப்பட்ட கூடுதான நிதி இதுவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

116299f6ea107359bd0d751f31aaff82_XL

Related posts: