இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
Friday, June 12th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 877 பேராக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 716 பேராக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 150 பேராக உயர்வடைந்துள்ளதுடன் இதுவரை இலங்கையில் இந்நோய் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய செய்தி!
வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி – பதவி இழக்கும் நிலையில் தவிசாளர்!
பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பாக வெளியானது வர்த்தமானி!
|
|
|


