யாழ்ப்பாணத்திலும் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் பிரிவுகள் செயலிழப்பு – நோயாளர்கள் அவதி!

Thursday, December 30th, 2021

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கின் பல வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டதால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது..

வடக்கில் வைத்தியசாலைகளில் அவசர மற்றும் உயிர்காப்பு சிகிச்சைகளுக்கு மாத்திரம் சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்பட்டதுடன் மேலதிக விடயங்களில் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

இதனால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்து விநியோகப் பிரிவு என்பன செயலிழந்து காணப்பட்டது.

இதனிடையே இன்று இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணியானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி ஆஸ்பத்திரி வீதியூடாக பலாலி வீதி மற்றும் ஸ்டான்லி வீதிக்கு சென்று அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர வீதி ஊடாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

போராட்டம் காரணமாக யாழ் நகரப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை சீர் செய்வதற்காக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related posts:


போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் த...
இந்திய கடன்திட்டத்தின் கீழ் கிடைக்கும் யூரியாவை பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் - விவசாய ...
கணினி செயலிகளை உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நட...