தனிமைப்படுத்தல் முகாம்களில் 8 பேருக்கு மலேரியா – வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவிப்பு!

Thursday, July 9th, 2020

தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள 8 பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆபிரிக்காவிலிருந்து வருகைதந்த இலங்கையர்கள் 8 பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

அத்துடன், பெல்வெஹர தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள 5 பேர் மற்றும் நீர் கொழும்பு வைக்கால பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள 3 பேர் இவ்வாறு மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஒரே நேரத்தில் அதிகளவான மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது எனவும் அவர் தெரிவித் துள்ளார்.

இந்நிலமையயை கருத்திற் கொண்டு மலேரியா அவதானம் உள்ள நாடுகளிலிருந்து வருகை தருபவர்களை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு மேலதிகமாக மலேரியா பரிசோதனைக்கும் உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:


அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர் -அமைச்சர் ராஜித்த!
தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்...
இறுதி நாட்களிலேயே நாட்டை திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் - இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் ...