நல்லூர் வீதியில் புகுந்த பாரிய முதலை!
Saturday, November 23rd, 2024
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
http://www.epdpnews.com/wp-content/uploads/2024/11/VID-20241123-WA0063-1.mp4

000
Related posts:
அரச மருந்தாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!
நுண்நிதி கடன் பெற்றவர்களுக்கு விடுதலை – 700 பேருக்கு தள்ளுபடி!
கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்களுக்கான வானிலை ஆய்வு மையம் அவசர அறிவுறுத்தல்!
|
|
|


