எரிவாயு கசிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 14 ஆம் திகதி ஆராய்வு!

Saturday, December 11th, 2021

உரிய தரமின்றி நாட்டுக்கு எரிவாயு கொண்டு வரப்பட்டமையினால் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளரான சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு மேன்முறையீட்டு நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவக பிரதிநிதிகள் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தற்போதைய எரிவாயு பிரச்சினை காரணமாக 6 மில்லியன் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக மனுவை விரைவில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மன்றில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: