ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது – அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகம தெரிவிப்பு!!

Tuesday, September 22nd, 2020

ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்தை போன்று இன்றைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகம தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் பதாகைகளையும் சபையில் ஏந்தியவாறு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், “20 ஆவது திருத்தம் கொண்டுவந்தவுடன் நிறைவேற்றப்படாது. 14 நாட்களுக்குள் இதற்கெதிராக உங்களால் நீதிமன்றம் செல்ல முடியும்.

இதற்கு பின்னர் நாடாளுமன்றில் விவாதங்கள் நடைபெற்றுதான் 20 நிறைவேற்றப்படும். இதனை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டவுடன், இவ்வாறு செயற்படுவது பிழையான ஒரு உதாரணத்தையே வெளிக்காட்டுகிறது.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை ஐக்கிய மக்கள் சக்தி புரிந்துக் கொள்ள வேண்டும். உங்களின் திருத்தங்களுக்கு செவிசாய்க்க நாம் தயாராகவே இருக்கிறோம்.

பதாதைகளை ஏந்தி நாடாளுமன்றை அவமதிக்க வேண்டாம். அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் என்பது நகைச்சுவைக்குரிய விடயமல்ல. நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்திற்கு இணங்க செயற்பட வேண்டும். 17 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டம் என்பன ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த தான் கொண்டுவந்தார்கள். மாறாக நாட்டின் மீது அக்கறை கொண்டு அல்ல. நாம் இவை அனைத்தையும் உணர்வோம்.

அத்துடன் கோட்டா- மஹிந்த ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது. நீங்கள் தான் 2001 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்தீர்கள். 2015 இல் வெற்றி பெற்று, எமது இராணுவத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் முற்பட்டீர்கள். அரச சொத்துக்களை விற்றீர்கள். இதனைத் தான் நீங்கள் கடந்த காலத்தில் செய்தீர்கள்.

எதிரணியில் பதாதைகளை ஏந்திக் கொண்டிருக்கும் 17 பேர் எம்முடன் இணைந்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கும். இவர்களின் பெயர்களை கூற நாம் விரும்பவில்லை.  எவ்வாறாயினும், நாம் இந்த நாட்டுக்கு எதிரான எதையும் செய்யப்போவதில்லை.

அந்தவகையில் 19 ஐ இல்லாது செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் எமது நோக்கமாகும். எனவே இது தொடர்பாக எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: