தெல்லிப்பழை, மல்லாகம் சந்திகளில் வீதிச் சமிக்கை விளக்கு -அவசியத்தை வலியுறுத்தி ஈ.பி.டி.பி. பிரேரணை!

Saturday, May 23rd, 2026


….
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட காங்கேசன்துறை பிரதான வீதியில் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் சந்திகளில் வீதிப் போக்குவரத்து சமிக்கை விளக்குளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது.

கடந்த 21.05.2026 அன்று நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஸ்ரீதரன் விடேச பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பித்து குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதேச சபை உறுப்பினர், ‘எமது பிரதேசத்தினை பொறுத்தவரையில் காங்கேசன்துறை வீதியில் அண்மைக்காலமாக வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக தெல்லிப்பழை சந்தியை அண்மித்து இரண்டு பிரபல பாடசாiலைகள் மற்றும் வைத்தியசாலை போன்றன காணப்படுகின்றன.

அதேபோன்று மல்லாம் சந்தியை அண்மித்தும் பாடசாலை, நீpதிமன்றம் போன்றன காணப்படுன்றன.
எனவே, குறித்த இரண்டு சந்திகளிலும் விபரீதங்கள் ஏற்பவதை தடுப்பதற்கான முன்னேற்பாடாக வீதிப் போக்குவரத்து சமிக்கை விளக்குகளை பொருத்த வேண்டும்.

குறித்த வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதியாக காணப்படுவதால், எமது இந்த எதிர்பார்ப்பினை குறித்த தரப்பின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று வலிறுத்திய நிலைiயில், குறித்த பிரேரணையை ஏற்றுக் கொண்ட சபை உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கம் தீர்மானத்திருக்கின்றது.

அதேபோன்று, காங்கேசன்துறை சந்தியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்து சேவையை முன்னெடுக்கின்ற முச்சக்கர வண்டிச் சங்கத்திற்கான பொதுக் கூட்டம் நீண்டகாலமாக நடத்தப்படவில்லை எனவும், இதன்காரணமாக சம்மந்தப்பட்ட சங்கத்தில் பதிவு செய்யப்படாத முச்சரக்கர வண்டிகளும் குறித்த இடத்தில் இருந்து சேவையில் ஈடுபட முயற்சிக்கின்ற நிலையில், தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவதாக முறைப்பாடு கிடைத்திருக்கின்றது எனவும் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீதரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

மேலும், பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டு சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க வழியமைப்பதோடு வலி வடக்கு பிரதேச சபையால்
ஆட்டோ சங்கம் ஆரம்பிக்கப்பட்டாலும் சங்கத்தின் நடைமுறைகளையும் கருத்திலெடுத்து சிறப்பான சேவையை முன்னெடுக்க வழியமைத்தால் சிறந்தது’ என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்
000

Related posts: