முறைகேடுகளை தடுக்கவே சீருடைகளுக்கு பதிலாக வவுச்சர் திட்டம்! – அமைச்சர் அகிலவிராஜ்!

Thursday, September 22nd, 2016

கடந்த காலங்களில் பாடசாலை சீருடைகள் வழங்கும் நடவடிக்கையில் இடம்பெற்ற கொள்ளைகளைத் தடுக்கவே சீருடைகளுக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டத்தைகொண்டு வந்ததாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கல்வி அமைச்சில் பல்வேறு முறைகளில் நிதி முறைகேடுகள்இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றைத் தடுக்கும் முகமாகவே இந்த திட்டத்தைஅறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கவலையடைவதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த கால ஆட்சியில் ஜனாதிபதியின் பாரியார் மூலம் கொழும்பில் பிரபலபாடசாலைகளில் மாணவர்கள் பெயர் பட்டியலுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும்குறிப்பிட்டுள்ளார்.

எனவே தான் கடந்த காலங்களைப் போல் முறைகேடுகள் கல்வி அமைச்சில் இடம்பெறாதுதடுப்பதற்காகவே பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

v0053

Related posts: