புதிய வீதி எமக்கு வேண்டாம்- குரும்பசிட்டி மக்கள்!

Tuesday, June 28th, 2016

இன்னமும் இராணுவத்தினர் வசமுள்ள 3 ஏக்கர் காணியை விடுவித்தால் அச்சுவேலி – அராலி வீதியை திறக்கமுடியும் இந்த நிலையில், எங்களுடைய காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள புதிய வீதி எங்களுக்கு வேண்டாம்’ என குரும்பசிட்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த 201.3 ஏக்கர் காணியை, கடந்த சனிக்கிழமை (25) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூகுரே ஆகியோர், உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகத்திடம் கையளித்தனர்.

இதன்போது, மேற்படி அச்சுவேலி – அராலி வீதியும் விடுவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களின் காணிகளை ஊடறுத்து கட்டுவன் சந்தியிலிருந்து குரும்பசிட்டி வரையில் இராணுவத்தினர் புதிய வீதியொன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

தங்களுடைய காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள வீதிக்கு ஒரு போதும் தாங்கள் அனுமதி வழங்க முடியாது எனவும், தங்கள் காணிகளுக்கு எல்லைகள் போடவுள்ளதாகவும், அச்சுவேலி – அராலி வீதியை விடுவிக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

kurumpasiddi

Related posts: