கடந்த ஒரு வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 250 பேர் கைது – 25 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக முல்லை – மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!

Sunday, December 24th, 2023

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை வரையான ஒரு வார7 காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் போதைப்பொருள பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்குவதுடன், 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிசாரினால் விசேடமான சுற்றி வளைப்புகள் பல நடாத்தப்பட்டு பல்வேறு கைது சம்பவங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மீட்கப்படுகின்ற சம்பவங்கள் இடம் பெற்றுவருகிறது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளில் இன்று (24) அதிகாலை வரையிலும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த சுற்றி வளைப்புகளின் போது 3 கிராம் ஹெரோயின், 480 கிராம் ஐஸ், ஒரு கிலோ 855 கிராம் 39 மில்லிக்கிராம் கேரள கஞ்சா, கஞ்சா செடி 5 மற்றும் 48 கிராம் வேறு வகையான போதை பொருட்கள் மற்றும் 443 லீற்றர் கசிப்பு, 1797 லீற்றர் கோடா உள்ளிட்டன மீட்கப்பட்டன.

மேலும் இரண்டு பெண்கள் உள்ளடங்களாக 111 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: