இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸும் இலங்கையும் பொதுவான பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் – இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023

இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸும் இலங்கையும் பொதுவான பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு உறவின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட், இலங்கைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், இலங்கையுடன் வலுவான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப பிரான்ஸ் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

“இந்தியப் பெருங்கடலைப் பொருத்தவரையில் பிரான்ஸுக்கும் இலங்கைக்கும் பொதுவான நலன்கள் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸ் இராஜதந்திர உறவுகளை வலுவாக பேணும் பல நாடுகள் உள்ளன.

பிரான்ஸ் தன்னை இந்தியப் பெருங்கடல் நாடாகக் கருதுகிறது. பிரான்ஸ் உலகின் இரண்டாவது பெரிய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளது.

இந்த கடல்சார் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் பிரான்ஸ் 30 சதவீதத்தை இந்தியப் பெருங்கடலில் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு தீவுகளில் நலன்களில் பிரான்ஸ் எப்போதும் அக்கறை கொண்டிருக்கும்.

இலங்கை சுதந்திரமடைந்ததை அடுத்து, 1948ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட பிரான்ஸ்-இலங்கை இராஜதந்திர உறவின் 75ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடுகிறோம்.

அதாவது ஆரம்பம் முதலே பிரான்ஸ் இலங்கைக்கு பக்கபலமாக இருந்தது. இந்த ஆண்டு நாம் கொண்டாட விரும்பும் வரலாறு இதுதான். தொடர்ச்சியாக எமது உறவுகளை வலுப்படுத்தி முன்னோக்கி செல்ல எதிர்பார்க்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: