விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் !

Tuesday, November 15th, 2022

சீனாவினால், இலங்கையின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதில் 7.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளது.

குறித்த எரிபொருள் தொகை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த எரிபொருள் தொகையை நெற்பயிர்ச் செய்கையின் போது வழங்க முடியாத போதிலும் அதனை நெல் அறுவடையின் போது வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த எரிபொருள் தொகையானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சீனாவினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை மதிப்பீடு செய்தார் பிர...
சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...
தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்...