தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்றில் அடிக்கமாட்டேன் – ஜனாதிபதி கோட்டாபய உறுதியளிப்பு!

Saturday, August 28th, 2021

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே செப்டெம்பர் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்குப் பின்னரும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்றில் அடிக்கமாட்டேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கோவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை பரிந்துரைகளை முன்வைத்த வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை முக்கியஸ்தர்கள் ஆகியோர், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதோடு, இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பிரதேசங்கள் காணப்படுமாயின், அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள, சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

ஏதேனுமொரு காரணத்தால் முதற்கட்டமாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாத நபர்கள் காணப்படுவார்களாயின், இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்களிலேயே அவ்வாறானவர்களுக்கும் முதற்கட்ட தடுப்பூசியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

இதனிடையே தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தொடர்பில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டங்களை, பிரதேச ரீதியில் அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை பரிந்துரைகளை முன்வைத்த வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை முக்கியஸ்தர்கள் ஆகியோர், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கு - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை ஆரம்பியுங்கள் – துறைசார் தரப்பினரிடம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கல...
பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அறிவிக்கவும் - தேசிய போக...