தீவக மக்களின் ஆளுமை செல்வநாயகத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Sunday, August 3rd, 2025


……….
தீவக மக்களின் ஆளுமை, மறைந்த அமரர் ஜே.எக்ஸ். செல்வநாயகம்  அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

வட மாகாண ஆளுநரின் முன்னாள் உதவி செயலாளராகவும், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகங்களின் முன்னாள் செயலருமாக இருந்து ஓய்வுபெற்ற ஜே.எக்ஸ். செல்வநாயகம் (J.X. Selvanayagam)
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த
02.08.2025 திகதியன்று  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்வநாயகத்தின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அன்னாருக்கு செயலாளர் நாயகம் தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் அன்னாரின் உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

அமரரின் பூதவுடலுக்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட பலரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர். 

இன்நிலையில் 90 களில் தீவக மக்களின் துயர் துடைக்க நாம் சென்றிருந்த காலத்தில் அரச உயர் அதிகாரியாக இருந்து நாம் முன்னெடுத்த பெரும் பணிகளுக்கெல்லாம் துணையாக இருந்த மனிதாபிமானம் நிறைந்த ஓர் ஆளுமை இன்று மக்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டது.

இந்த ஆளுமையின் இழப்பு தீவக மக்களுக்கு பேரிழப்பையும் சேவையில் பெரும் இடைவெளியையும் ஏற்படுத்தியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துளமை குறிப்பிடத்தக்கது.
990

Related posts: