மீசாலையில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க தீர்மானம்!

Thursday, October 26th, 2017

மீசாலையில் புதிதாக தொழிநுட்ப கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தரமான தொழில் பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தொழில்நுட்பகல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்விகளை வழங்கி வரும் ஒரே நிறுவனம் யாழ்பாணம் தொழிநுட்ப கல்லுரியாகும்.

இங்கே கற்கைநெறிகளை தொடர்வதற்கான சுமார் 8000 பேர் விண்ணப்பிக்கின்றனர். இருப்பினும் தொழிநுட்பகல்லூரியில் 1500 பேருக்கு மாத்திரமே பயிற்சிகள் பெற வாய்ப்புள்ளது. இதனை கவனத்தில் கொண்டு மீசாலை , வடக்கு தென்மராட்சி வலிகாமம் பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய தொழில் தகுதி ( NVQ ) 3-ம் 4-ம் மட்டத்திலான தொழிற்பயிற்சி கல்லூரிகள் முன்னெடுப்பதற்கு தீரமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக 560 மில்லியன் ரூபா செலவில் இந்த தொழில்நுட்பக்கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இதை 2 வருட காலத்திற்குள் அமைப்பதற்கு ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts: