அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் தடுப்பூசி – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, December 27th, 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு பெற்றுகொடுக்க தீர்மானித்துள்ள, கொரோனா தடுப்பூசிகளை நோய் தொற்றால் அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் வழங்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதாவது, நீரிழிவு, இருதய நோய், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு என்பவற்றுடன் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி, ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்களுக்கு தடுப்பூசிகளை முதலில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை அடுத்த ஆண்டு முதற்பகுதியில் இலங்கைக்கு இலவசமாக பெற்றுகொடுக்க, உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசாங்க வளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன - பஃவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு...
மானிப்பாய் பகுதியில் விபத்து - முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையி...
இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய இந்தி...