மீண்டும் முளைக்கும் இராணுவ காவலரண்கள் – குழப்பத்தில் குடாநாட்டு மக்கள்!

Tuesday, October 1st, 2019

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து வட பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடிகள் மீண்டும் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலை அடுத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ முகாம் அமைக்கப்பட்ட நிலையில், அண்மையில் அகற்றப்பட்டன.

இந்நிலையில் அகற்றப்பட்ட இராணுவ சோதனைச் சாவடிகள் மீண்டும் ஆங்காகே முளைத்துள்ளதாக தெரிய வருகிறது.

கண்டி நெடுஞ்சாலை, நாவற்குழி பாலம் மண்டைதீவு சந்தி ஆகிய பகுதிகளில் இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்கின்றனர்.

வட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் கடந்த மாதம்  என்ரப்பிறைஸ் சிறீலங்கை நிகழ்ச்சியை முன்னிட்டு அகற்றப்பட்டன. இந்நிலையில் மீண்டும் சோதனை சாவடிகள் தற்போது அமைக்கப்பட்டு யாழ். குடா நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளமை குறிப்டபிடத்தக்கது.

Related posts:

1700 பல்கலைக்கழக வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க 23ஆம் திகதி வரை அவகாசம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதம் - சர்வதேச ஊழல் ஒழ...
தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் - அரசியல் விடயங்களை சம்பந்தப்படுத்தக்க...