சிறப்பாக நடைபெற்றஅராலி வள்ளியம்மை  வித்தியசாலையின் பரிசளிப்பு விழா!

Saturday, October 25th, 2025


……
அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய வாத்தியங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள், கலை நிகழ்வுகள், பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.

பாடசாலையின் முதல்வர் பொ.சிவரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.சிவசிவா கலந்து சிறப்பித்ததுடன், விழாவில் ஏனைய விருந்தினர்கள், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் – ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், கல்வி சாரா ஊழியர்கள் பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
000

Related posts: