மழைக்காலம் முடிவடைந்தவுடன் நாட்டில் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பிக்கப்படும் – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 24th, 2021

மழைக்காலம் முடிவடைந்தவுடன் நாட்டில் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கோழியிறைச்சி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நான் கோடிட்டுக் காட்டினேன், எதிர்க்கட்சிகளும் அதே பிரச்சினைகளை கொண்டு வந்தன. அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.

இதேநேரம் சுகாதார துறையின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகள் கவனத்திற்க் கொள்ளப்பட்டு வரவு செலவுத் திட்டத்தில் சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தயங்கமாட்டோம். பத்திர மோசடி நிதியை நாங்கள் பறிமுதல் செய்தது போல், வேறு ஏதேனும் ஊழல்கள் இருந்தால், அந்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய தயங்கமாட்டோம்.

இது போன்ற மோசடிகளை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிதத அமைச்சர் பசில் ராஜபக்ச அது தொடர்பில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: