தடை நீக்கப்பட்டபின் 2800 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி!

Saturday, August 6th, 2016

இவ்வருட இறுதிக்குள் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கிடைக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர்  2800 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்கள்  அங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த  அமரவீர மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சிக்காலத்தில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைத் தடை செய்யப்பட்டது.

இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில்  நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், மக்கள் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டதால், இவ்வருட இறுதிக்குள் எமக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை கிடைக்கவுள்ளது.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரையில் 2800 இலட்சம் மெட்ரிக்தொன் மீன்கள் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதிக்கள் பல புதிய  நிறுவனங்களும் தற்போது  முன்வந்துள்ளன.

தற்போது 55 அடி நீள  படகுகளை அமைத்து மீன்களை  பழுதடையாமல் பாதுகாப்பதற்கான வசதிகளுடன் படகுகள்  நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மீனவர்களுக்கு  சர்வதேச கடலில் மீன் பிடிப்பதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன.

இதன் மூலம் எமது மீன்களின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும். இலங்கையில் கிடைக்கும் மீன்கள்  தொண் ஏற்றுமதிக்கு போதுமானதாக இல்லை. எனவே எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து மீன்களை கொண்டு வந்து ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Related posts: