ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் – மூவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் 24 ஆம் திகதிவரை தடை உத்தவு!

Monday, April 8th, 2024

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரில் இன்று இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போது நிமல் சிறிபால டி சில்வா பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்று திங்கட்கிழமை எடுத்துக்கொண்ட போதே கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகளில் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சரதி துஷ்மந்த மித்ரபால உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும் நியாயமான ஒழுக்காற்று விசாரணையின்றி தம்மை கட்சியில் இருந்து நீக்கி கட்சி செயற்குழு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரி சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது - இராஜாங...
காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு அங்கிகள் - வீதி அபிவிருத்...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம்முதல் விநியோகிக்...