சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுன் கால அவகாசம் இன்று நிறைவு!

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்விற்கு நீதிமன்றம் வழங்கிய 45 நாட்கள் கால அவகாசம் இன்று நிறைவடைகிறது.
45 வது நாளுடன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது.
எனினும், சித்துப்பாத்தி மனித புதைக்குழி வளாகத்தில் மேலும் என்புக்கூட்டுகள் காணப்படக்கூடும் என்பதையொட்டி, 8 வாரங்கள் கால அவகாசம் மேலும் தேவைப்படுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
இதுவரை சித்துப்பாத்தியில் 240 மனித என்புக்கூட்டுகள் வெளிபட்டுள்ளன.
அவற்றில் 235 என்புக்கூட்டுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தில் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட கட்டளை இன்றைய தினம் வெளியாகும் என பாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்
000
Related posts:
பேலியகொடை கொரோனா கொத்தணி பணத்தாளினூடாக பரவியது - சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன – ஐக்கிய இராச்சியத்தின் ...
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் - பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
|
|