வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தீர்மானத்துள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் முருக தெரிவிப்பு!

Saturday, February 11th, 2023

பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தீர்மானத்துள்ளதாக அறிவித்துள்ள இந்திய மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர் எல். முருகன்,

இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் எதிர்காலத்தில் தொடரப் போகின்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தப் போவதன் அடையாளமாக யாழ்ப்பாணம் கலாசார நிலையம் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்

‘நூற்றாண்டிற்கு இன்னும் இருபத்தைந்து’ எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம் கலாசார நிலையம் பொதுமக்கள் பாவனைக்க கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அதிதிகள் பிரசன்னத்துடன் இடம்பெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தருந்தார்.

‘நூற்றாண்டிற்கு இன்னும் இருபத்தைந்து’ எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அதீதிகள், யாழ்ப்பாணத்தின் தொல்லியல் சின்னங்களையும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: