3 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பல கோணங்களில் விசாரணை!

Wednesday, May 31st, 2017

திருகோணமலை மல்லிகைத்தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள காவற்துறை குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான பணிப்புரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் மாவட்ட பிரதி காவற்துறை மா அதிபருக்கு பிறப்பித்துள்ளார் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி காவற்துறை மா அதிபர் கிழக்கு மாகாண அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்

இதனடிப்படையில் தற்போது சிறப்பு குழுவொன்றை நியமித்து சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சிறுமிகள் மீதான வன்முறை சம்பவங்கள் கண்டிக்கதக்க விடயம் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Related posts:

இவ்வருடத்தில் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணம் - நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவி...
இடைவெளியை கடைப்பிடிக்காவிடின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - பிரதி பொலிஸ்மா அதிபர்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு - இரத்ததானம் செய்யவதற்கு முன்வருமாறு பொதுமக்களிடம் அ...