பேலியகொடை கொரோனா கொத்தணி பணத்தாளினூடாக பரவியது – சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Wednesday, November 4th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க காரணமாக இருந்த கொழும்பு பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

இதனடிப்படையில் பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி-1.42 ரக தொற்றுப்பிரிவு பரவியிருப்பதாக சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை கொரோனா கொத்தனி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது. எனினும் அதனை மிஞ்சிய பேலியகொடை மீன்சந்தை கொத்தனி ஒக்டோபர் 21ஆம் திகதி பரவ ஆரம்பித்து இன்றுவரை பாரிய அளவில் வியாபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: