சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளின் நீதிமன்று தீர்ப்பு அதிகாரபூர்வமாக கிடைக்கவில்லை – கிடைத்ததும் நடவடிக்கை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

……
சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளின் நீதிமன்று தீர்ப்பு அதிகாரபூர்வமாக கிடைக்கவில்லை – கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –
சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளின் இரு உறுப்பினர்களது இருப்பிட உறுதி விடையம் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டது.
ஆனாலும் அந்த தீர்பின் இறுதி அறிக்கை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
ஒருவரது தனிப்பட்ட விடயம் தொடர்பில் வேட்புமனு நிராகரிக்கப்படாது. ஆனாலும் குறித்த வழக்கின் தீர்ப்பு பெண் உறுப்பினர்களின் பிரதினிதித்துவம் தொடர்பானதாக இருப்பதால் வேட்புமனுவில் கோரியபடி பெண் பிரதினிதித்துவம் இல்லாதுவிடின் அது குறித்து நடவடிக்கைக்கு செல்ல வேண்டும்
எனவே நீதிமன்றின் தீர்ப்பு கிடைத்தால் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்
00
Related posts:
|
|