பாதுகாப்புத் தரப்பின் சீருடையுடன் ஆசிரியர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி!

Tuesday, April 10th, 2018

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 21 நாள் தொடர் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் முல்லைத்தீவு தேராவில் இராணுவ முகாமுக்கு இதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் நடாத்தப்படும் பண்ணைகள் மற்றும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பகுதி பகுதியாக அழைக்கப்பட்டு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

எம்மைப் பணியில் இணைக்கும் போது இராணுவப் பயிற்சிகள் எவையும் இல்லை என்று கூறினார். தற்போது இராணுவப் பயிற்சிக்காக அழைக்கின்றனர். எதிர்த்துப் பேசினால் தொழில் இழக்க நேரும் என்பதனால் மௌனம் காக்கின்றோம் என்று தலைமைத்துவப் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டில் நாம் முகாமில் இருக்க எமது குடும்பம் சோகத்தில் இருக்கும் நிலமையே ஏற்படும். உயிர்வாழ உணவுக்காக தொழிலிற்குச் சென்ற நிலையில் தற்போதும் அவல நிலமையே தொடர்கின்றது என்று குறிப்பிட்டனர்.

இவை மட்டுமன்றி இந்தப் பயிற்சிக்காக அனைவரும் இராணுவச் சீருடை அணிந்தே செல்ல வேண்டும் என்பதற்காக இரு சோடி சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: