2022ஆம் ஆண்டில் மாத்திரம் 10 ஆயிரத்து 077 தொடருந்து சேவைகள் இரத்து – தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தகவல்!
Sunday, October 22nd, 2023
2022ஆம் ஆண்டில் மாத்திரம் 10,077 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டு ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 993 தொடருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில், 32 ஆயிரத்து 844 தொடருந்துகள் மாத்திரமே உரிய நேரத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் 88 ஆயிரத்து 149 தொடருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை எனவும் தேசிய கணக்காய்வாளர் அலுவலகம்; தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெட்கப்பட வேண்டும் - ரோஷன் மஹானாமா!
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையில் மீண்டும் மாற்றம்!
தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது - சீன தூதுவர் சுட்டிக்காட்டு!
|
|
|


