சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடிக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்பு!
Tuesday, January 28th, 2025
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
பொறுப்பேற்கப்பட்ட பொருட்களில் வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கியுள்ளன.
டுபாய் மற்றும் மலேசிய ஆகிய நாடுகளிலிருந்து குறித்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவரிகளுக்குக் குறித்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
000
Related posts:
வெளிநாட்டவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
ஊரடங்கு சட்டம் நீக்கம்: நீண்ட நாள்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் – நாளாந்த ...
ஆளுநர் உத்தரவாதம் - இ.போ.சா இணக்கம் - கைவிடபட்டது சேவை முடக்கல் போராட்டம்!
|
|
|


