சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு  தேர்தல் ஆணைக்குழு அவசர கோரிக்கை! 

Thursday, May 22nd, 2025

நாட்டிலுள்ள அனைத்துக் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை உள்ளூராட்சி சபைகளின் விபரங்களுடன் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 27 ஆம் திகதிக்கு முன்னர் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

000

Related posts: