சிறப்புத் தேவையுடையவர்களுக்கான மலசலகூடங்கள் அமைப்பது தொடர்பான இருவார ஆய்வு!

Wednesday, February 7th, 2018

முள்ளந்தண்டு வடம் பாதித்தோர், பார்வைக் குறைபாடு உடையோர், கைகால் ஊனமுற்றோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு எவ்வாறான அணுகுமுறையுடன் கூடிய மலசல கூடத்தை அமைக்கலாம் என்ற தொனிப்பொருளில் இருவார ஆய்வுகள் அண்மையில் இடம்பெற்றன.

இதன் இறுதி வடிவம் வேள்ட்விசன் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் யாழ்ப்பாணம் ரில்ஹோ விருந்தினர் விடுதியில் ஆராயப்பட்டது.

கம்போடியா மற்றும் அவுஸ்திரேலியா வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சமூக மட்டத்தில் குறைந்த செலவில் எவ்வாறான மலசல கூடத்தை சிறப்புத் தேவையுடையவர்களுக்கு முன்வைக்கலாம் என ஆய்வு செய்யப்பட்டு அதன் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்புத் தேவையுடையவர்களுக்கு தேசிய மட்டத்தில் முன்னளிக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு அமையவும் உள்ளுராட்சி அதிகார சபைகளின் சட்டத்துக்கு இணங்கவும் முறைப்படுத்தப்பட்ட மலசல கூடங்களை அமைக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

குறைந்த அளவிலான செலவில் மலசல கூடம் அமைப்பது என்பது சுகாதாரம் மற்றும் பேண்தகு நிலைக்குப் பொருத்தமற்றது என வெளிப்படையாகக் கூறப்பட்டது.

இதனால் பேண்தகு அடிப்படையிலான நிரந்தர மலசல கூடங்கள் பொருத்தமானது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related posts: