நெல் கொள்வனவு அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு – அமைச்சரவையும் அனுமதி!

Tuesday, February 28th, 2023

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனையை சமூக பாதுகாப்பு பங்களிப்பில் இருந்து விடுவித்த பின்னர், விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவுக்கு மேல் ஒரு கிலோ நாட்டு அரிசியை வாங்கும் போது, ஒரு கிலோ அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை தற்போதைய விலையில் பராமரிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசியை இலவசமாக வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: