பாடசாலைகளை தற்போதைக்கு மீள திறக்கக் கூடாது – ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே கோரிக்கை!

Monday, May 3rd, 2021

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை தற்போதைக்கு மீளத் திறக்கக் கூடாது என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

உருமாறிய கோவிட் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும் எனவே தற்போதைக்கு பாடசாலைகளை திறப்பது ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளை மூடுதன் மூலம் நோய்த் தொற்று காவுவதனை வரையறுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உருமாறிய கோவிட் வைரஸ் தொற்று வீரியம் கொண்டது எனவும் இதனால் இளம் தலைமுறையினருக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவ மாணவியர் நீண்ட காலம் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப்பது பாதகமானது என்ற போதிலும், உயிர்களை பாதுகாத்துக் கொள்ள வேறு மாற்று வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகின் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதன் மூலமே நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் எனவும் பேராசிரியர் நீலிகா ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: