கப்பலை அழிப்பது குறித்து தீர்மானமில்லை – கனடா அரசாங்கம்!

Tuesday, April 17th, 2018

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அகதிகளை ஏற்றி கனடாவிற்கு சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து கனடா அரசாங்கம் இன்னும் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை எனகனடாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல் 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 இலங்கை அகதிகளை ஏற்றிக்கொண்டு கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சென்றடைந்தது.

இந்த கப்பலில் பயணித்த இலங்கை அகதிகளுக்கான அரசியல் அந்தஸ்த்து வழங்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலின் ஊடாக ஆட்கடத்தலை மேற்கொண்டதாக இமானுவேல் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் மீதான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் நங்கூரமிட்டுள்ள குறித்த கப்பலில் மிருகங்கள் வசிப்பதாகவும், அதனை என்ன செய்வது என்று அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும்கனடாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் நங்கூரமிட்டுள்ள குறித்த கப்பலில் மிருகங்கள் வசிப்பதாகவும், அதனை என்ன செய்வது என்று அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும்கனடாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: