யுத்தத்தால் இன்னலுற்ற மக்களது எதிர்காலத்தை TNA யின் ஊழலாட்சி தவிடுபோடியாகிவிட்டது – ஈ.பிடி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, July 9th, 2020

ஊழல் என்பது சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செயலாகவே ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லாட்சி என்ற சொல்லாட்சியில் நிலவியது என்பதை யாரும் மறுக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண உதவி நிர்வாக செயலாளரும், விருப்பு இலக்கம் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை  ஶ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) தெரிவித்துள்ளார்.

உடுப்பிட்டி ஆதியாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஐக்கிய தேசியக் கட்சி பிணைமுறி மோசடியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை நிர்வாகத்திலும் கம்பெரலிய செயற்திட்டத்திலும் மக்களின் வரிப்பணத்தை மிகச் சுலபமாக மோசடி செய்திருந்தன..

வேலியே பயிரை மேய்வது போன்று நல்லாட்சி என்ற அரசு எந்தவித தங்குதடையுமின்றி மக்களின் வரிப்பணத்தை ஏப்பமிட்டது. யுத்தத்தால் இன்னலுற்று துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்த மக்களது வாழ்வியலை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இருந்த இளைஞர்களதும், யுவதிகளதும் நம்பிக்கை ஊழல் ஆட்சியில் தவிடுபோடியாகியது.

மக்களின் வாக்குகளால் மக்கள் பிரதிநிதிகளாக வந்தவர்கள் தாங்கள் ஏட்டிக்கு போட்டியாக ஊழலும் மோசடியும் செய்வதில் கொள்கையாக இருந்தார்கள். பிரதேசத்தின் அபிவிருத்தியிலோ மக்களின் வாழ்வியலிலோ மாற்றம் ஏதுவும் ஏற்படவில்லை.

எனவே வருகின்ற தேர்தலில் இந்த மக்களின் குறைபாடுகள் விரைவில் நிவர்த்தி செய்ய எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து வைத்துள்ளார். அதற்காக மக்களின் ஆணைக்காக காத்திருக்கின்றார்.

உடுப்பிட்டி வல்வை நெசவாலை, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் புதிதாக தொழிற்சாலைகளை இயக்குவதன் ஊடாக பல இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். அதற்கான சிந்தனையும் எண்ணமும் எம்மிடமுள்ளன.

எனவே, உடுப்பிட்டி தொகுதி வாக்காளர்கள் ஒரே ஒரு முறையாவது எமக்கு வாக்களித்து வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும். நாம் வாக்கு கூறுவது இருள்சூழ்ந்த மக்களை ஒளியூட்டுவதற்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கரவெட்டி பிரதேச உதவி நிர்வாக செயலாளர் இந்திரராஜா துசிகரன் வட்டாரச் செயலாளர் விளையாட்டு திருமதி நதிராணி மற்றும் உள்ளுராட்;சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts: