உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய விஷேட குழு நியமனம் !

Tuesday, January 12th, 2021

உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைமையை மீளாய்வு செய்வதற்காக மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது

குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆர்.ஏ.கே.கே ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கறித்த குழுவை நியமித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் –

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையினால் உள்ளூராட்சி மன்றங்கள் ஸ்திரமின்மையை அடைந்துள்ளதாக அரச சேவை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சிற்கு கட்டம் கட்டமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கட்டளை சட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ கலப்பு முறையின் காரணமாக உள்ளுராட்சி நிறுவனங்களின் ஸ்திரத் தன்மை பாதிக்கப்பட்டதாக பலதரப்புக்களிடமிருந்து முறைபாடுகள் கிடைத்திருந்தன. அவற்றை ஆராய்ந்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு பணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிபபிடத்தக்கது.

Related posts:


பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பே கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை - யாழ். இராணுவக் கட்டளைத...
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள மாகாண பணி...