அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவுறுத்தல் !

Sunday, November 8th, 2020

நாட்டில் தற்போது நடைமுறையிலள்ள ஊரடங்கு சட்டம் நாளையதினம் தளர்த்தப்படவுள்ள நிலையில், அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாளாந்த அலுவல்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமான பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பணியாளர்களை அழைக்கும் தீர்மானத்தை, அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பணியாளர்கள், தற்போது நடைமுறையில் உள்ளவாறு, வீடுகளில் இருந்தே தமது அலுவல்களை மேற்கொள்ளுமாறும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: