சீனாவின் விவசாய கண்காட்சியில் இலங்கையின் பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சீனா அழைப்பு!

Tuesday, September 26th, 2023

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நடைபெறும் வருடாந்த விவசாய கண்காட்சியில் இலங்கையின் பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சீனா உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி , குறித்த கண்காட்சி எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

சீனாவின் ஹைனான் மாகாணத்தின் துணை ஆளுநர் கு கேங் உள்ளிட்ட குழுவினர் விவசாய அமைச்சுக்கு வந்து இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் நெல் சாகுபடி குறித்தும் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் ஹைனான் மாகாணமானது நெல் சாகுபடிக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், அந்த மாகாணத்தில் ஒரு ஹெக்டேயருக்கு அரிசி விளைச்சல் 7500 கிலோ என்றும் சீனப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் தற்போது 4.5 தொடக்கம் 5.0 மெட்றிக் டொன் அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஹைனான் மாகாணத்தில் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது தொடர்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பழங்கள் தொடர்பில் தகவல் வழங்கிய விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, ஏற்றுமதி தரத்திலான புளிப்பு வாழைப்பழங்கள், சீத்தாப்பழம் , பேரீச்சம்பழம், பப்பாளி, அன்னாசிப்பழம் போன்றவையும் நாட்டில் பயிரிடப்படுவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: