சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த பின்னடிக்கின்றது கனியவள திணைக்களம் -பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு!
Wednesday, December 24th, 2025
………..
மண்கும்பான் பகுதியில் சில நபர்களால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலகம் எழுத்து மூலம் கனியவள திணைக்களக்கத்துக்கு கோரிக்கை விடுத்தும், அத்திணைக்களம் நடவடிக்கை எடுப்பதில் தளர்வுப் போக்கு அல்லது அக்கறை இன்மை காட்டுவதாக வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இவ்விடையம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி குறித்த பின்னடிப்புக்கான காரணத்தை வழங்குமாறு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரால், கோரப்பட்டது.
இதன்போது கனியவள திணைக்களத்தின் அதிகாதி கூறுகையில் –
மண் அகழ்வு நடவடிக்கையின் போதே, தங்களால் குறித்த நபரையோ குழுவையோ சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும். அதனால் சாட்சிகள் இல்லாது சட்டத்தின் முன் யாரையும் நிறுத்த முடியாது.
அவ்வாறு ஆதாரங்கள் கிடைத்தாலும் எமக்கான பாதுகாப்பு இல்லை. எனவே இவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளவு அவசியம். மேலும் பொலிசாரும் கிராம சேவகரும், ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
துறைசார் அதிகாரியின் கருத்தை நிராகரித்த பிரதேச செயலர், கிராம சேவகருக்கு இவ்விடையம் ஒரு சிறு பங்குதான், ஆனால் கனியவள திணைக்களத்தின் முழுமையான பொறுப்பு அல்லது கடமை இது சார்ந்ததாகவே இருக்கின்றது.
அதே நேரம் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடந்தால் அதை தடுக்கும் அல்லது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் அதிகாரம் இருக்கின்றது.
ஆனால் நாம் நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பினால் பொலிசாரிடம் முறையிடுங்கள் என எமக்கு பதில் கடிதம் எழுதுகின்றீர்கள்.
எமக்கெழுதும் கடிதத்தை ஏன் நீங்கள் பொலிசாருக்கு எழுதி நடவடிக்கை எடுக்க முடியாது. அது உங்களுக்குரிய பொறுப்பு என சுட்டிக்காட்டினார்.
இன்நிலையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கருத்துக் கூறுகில் – அப்பகுதி மக்கள் ஆதாரம் தருகின்றார்கள். பிரதேச சபையும் ஒத்துழைப்பு தருகின்றது. பொலிசாரும் தமக்குரிய பங்களிபை செய்கின்றனர்.
சட்ட நடசடிக்கை எடுக்கும் அதிகாரம் அத்துறைசார் திணைக்களத்துக்கே உரியது.
எனவே கனியவளத் திணைக்களம் தனது பொறுப்பை அடுத்தவர் மீது சுமத்தாது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த வகையில் அடுத்த வருடம் ஜனவரி முற்பகுதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
000
Related posts:
|
|
|


