இலங்கையில் தங்க ஆபரண இரத்தினக்கல் நிலையம்!

Saturday, July 28th, 2018

நவீன தங்க ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் கேந்திர நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு தாம் தயாராகி வருவதாக சீனாவின் பிரமாண்டமான தங்கச்சுரங்க  நிறுவனமான சேன் மெங்சியோ ஜிங்கு குரூப் முன்வந்துள்ளதுடன் சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை விரிவுபடுத்த இது பெரிதும் உதவுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹங்காய் தங்கப் பறிமாற்ற நிறுவனத்துக்கு பக்க பலமாக நின்று உலகிலேயே பௌதீக ரீதியான பிரமாண்டமான தங்கப் பரிமாற்ற நிலையமாக ~ங்காய் நிறுவனத்தை மாற்றியுள்ள இந்த நிறுவனத்தின் தலைவரான சூ யூச்சின் இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனை சந்தித்த போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன் இதன் மூலம் இலங்கையில் தங்கம் மற்றும் இரத்தினக்கல் பங்குச் சந்தையின் பெறுமானம் மேலும் அதிகரிக்குமெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் சீன உல்லாசப் பயணிகளுக்கு இந்த நிர்மாண முயற்சி பெரிதும் பயனளிக்குமெனவும் அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது சீனாவின் சன் மெங்சியோ நகரின் உதவி மேயர் சன் ஜிவி உட்பட சீனாவின் முன்னணி வர்த்தகர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related posts: