தாய்லாந்து செல்கிறார் முன்னாள் அரச தலைவர் கோட்டாபய . தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்து அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, August 11th, 2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்து நாட்டுக்கு பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராஜதந்திர கடவுச்சீட்டின் மூலமாக கோட்டாபய ராஜபக்ச 90 நாட்கள் தமது நாட்டில் தங்குவதற்கhன அனுமதியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தாய்லாந்து அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் கோட்டாபய ராஜபக்ச எப்போது வருவார் என்று அவர் தெரிவிக்கவில்லை.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜபக்ஷவின் சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரையும் அவரது மனைவியையும் ஏற்றிச் செல்ல விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: