கரவெட்டியில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு உயிரிழப்பு !
Saturday, March 8th, 2025
வடமராட்சி கரவெட்டி யா/திரு இருதயக்கல்லூரி மாணவன் ஒருவர் நேற்றைய தினம் 07-03-2025 வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் .
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
கரவெட்டி யா / இருதயக்கல்லூரி பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் வீட்டில் நேற்றையதினம் இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்தள்ளதாக கூறப்படுகின்றது .
சம்பவத்தில் கரவெட்டி மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் வயது 14 என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
இந்திய அரசாங்கத்தால் தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு!
திருமலை எரிப்பொருள் தாங்கி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
முல்லைத்தீவில் இயற்கை வளங்கள் அழிப்பு : மக்கள் குற்றச்சாட்டு!
|
|
|


